Header Ads



ஒரு முட்டைக்கான உற்பத்தி செலவு 30 ரூபா, 60 ரூபா விலை கொடுத்து வாங்கும் அவலம்


நாட்டில் ஒரு முட்டைக்கான உற்பத்தி செலவு சுமார் 30ரூபாயே செலவாகும் நிலையில், மக்கள் அதனை 60ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இதன்படி அடுத்த வாரம் முதல், நியாயமான அதிக பட்ச சில்லறை விலையில் மக்கள், முட்டையை கொள்வனவு செய்வதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.