கோட்டாபய செயலகத்தில் மீட்கப்பட்ட நாப்கின்கள் - நடிகை உட்பட 3 பெண்களிடம் DNA பரிசோதனை
இச்சம்பவம் தொடர்பில் இலங்கையில் மூத்த நடிகை உள்ளிட்ட 3 பெண்களின் இரத்த மாதிரிகள் தொடர்பான டி. என். ஏ-வை பரிசோதனைக்காக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 9, அன்று செயலகத்திற்குள் செயற்பாட்டாளர்களாக நுழைந்த சம்பவத்தில் பிணையில் மூத்த நடிகை தமிதா அபேரத்ன உள்ளிட்ட 3 பெண்களின் இரத்த மாதிரிகள் தொடர்பான டி. என். ஏ. பரிசோதனைக்காக அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி அரச சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் மீட்கப்பட்ட 6 சானிட்டரி நாப்கின்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் மூவருக்கும் இரத்த மாதிரிகளை வழங்க உத்தரவிடுமாறு கொழும்பு வடக்கு குற்றப் பிரிவு நீதிமன்றினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் பரிசீலித்தார்.
மேலும இந்த உத்தரவ தமிதா அபேரத்ன, நோனா முரின் மற்றும் சச்சினி கௌசல்யா ஆகிய மூன்று பெண்களுக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment