3% எப்படி, 51% ஆக அமையும்..?
தேசிய மக்கள் சக்தியை கண்டு அஞ்சி எதிரணியில் உள்ள கீரியும் பாம்பும் ஒன்றுசேர்ந்து சதிசெய்கின்றன
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க
(இரத்தினபுரி மாவட்ட பெண்கள் மாநாடு - 2024.03.03)
எங்களுக்கு தற்போது இரண்டு பிரதான பணிகள் இருக்கின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது இந்த நாட்டை சீர்செய்வது. நீண்டகாலமாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அரசியல் அதிகாரிகள் இந்த நாட்டுக்கு அழிவுமிக்க நிலைமையையே உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எமக்கு அழிவுமிக்க எதிர்காலத்தையே எஞ்சவைப்பார்கள். அதனை இனிமேலும் பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. நலமான எதிர்காலத்திற்காகவே நாங்கள் அனைவரும் மல்லுக்கட்டவேண்டும். அதற்காக இதுவரை பயணித்த அரசியல் பாதைக்குப் பதிலாக புதிய அரசியல் பயணப்பாதையில் பிரவேசித்தே ஆகவேண்டும். நாங்கள் அதிகாரத்தை பெற்றேதீரவேண்டும். இந்த வருடத்தின் ஒக்டோபர் இறுதியளவில் இந்த நாட்டில் ஓர் புதிய அரசாங்கமே நிலவும். இப்போது தேர்தலை நடாத்துவது பற்றி ஐயப்பாட்டுடன் ஏன் சிந்திக்கிறீர்கள்? முதல்த்தடவையாக நாட்டின் "அதிகாரம்" மேலே இருக்கின்ற ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு மாறஇருப்பதாலாகும். அவர்கள் இதுவரை தேர்தலை பிற்போட்டது அதிகாரத்தை இழக்கவேண்டி நேரிடுமென்ற அச்சம் காரணமாகவே. இங்கே குழுமியுள்ள பெண்களைப் பார்க்கும்போது இப்போது தேர்தலை பிற்போட எப்படியும் அஞ்சுவார்கள்.
தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்கின்ற மக்களின் அலை மிகப்பெரியது. அதன் காரணமாக பாம்பும் கீரியும் ஒன்றுசேர்ந்திருக்கின்றது' அனைவரும் கூட்டாக அவதூறு கற்பித்தலில் ஈடுபட்டுள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க அவருடைய பிரச்சார வேலைத்திட்டத்தை வடிவமைத்துள்ளார். அந்த வடிவமைத்தலுக்கான இலங்கையில் இருக்கின்ற மூன்று பிரச்சார நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த பிரச்சாரத் திட்டத்தில் எம்மைப்பற்றிக் கூறவே வேண்டும். எம்மைப்புறிக் கூறவேண்டிய பகுதியை எமது ஒருவரிடமே கொடுத்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க உருவாக்குகின்ற பிரச்சார அறிவித்தல்களில் மூன்று விடயங்கள் இருக்கின்றன. ஒன்று 88 - 89 மற்றும் மே மாதம் 09 ஆந் திகதி சம்பவங்களில் மக்கள் விடுதலை முன்னணி தமது வன்முறைசார்ந்த வரலாற்றினைக் கைவிடவில்லை என்பதற்கான பிரச்சாரம் வழங்குவதாகும். மே மாதம் 09 ஆந் திகதிய தீமூட்டல்களுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருக்கின்றது. அதில் பங்கேற்றவர்களின் அரசியல் தொடர்புகள் அந்த பெயர்ப்பட்டியலில் இருக்கிறன. அதிகூடிய தொடர்பு மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே உண்டு. இவர்களின் இந்த முயற்சி மீண்டும் இறந்தகாலத்தை கிளறியெடுத்து மவிமு பற்றிய பீதிநிறைந்த புலக்காட்சியொன்றை உருவாக்குவதாகும்.
அதைப்போலவே இவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள். தற்போது உயிருடன் இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகள் ஐவரும் ஜனநாயகத்திற்கு சட்டத்திற்கு எதிராக இயங்கியவர்கள். ஐவருமே நீதிமன்றத்தில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். பாராளுமன்றத்திற்கு அருகில் இருக்கின்ற காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தி தனது நண்பரொருவருக்கு வழங்கியமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாகியமையால் சந்திரிக்காவிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்வித்த தவறுக்காக "பொருளாதாரப் படுகொலையாளிகள்" என உயர்நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவராவார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மூலமாக அவருக்கு அதிகாரமின்றி பாராளுமன்றத்தைக் கலைத்தார். உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஏழு பேர் அது அரசியலமைப்பிற்கு முரணானதென தீர்ப்பளித்தார்கள். அடுத்ததாக உயிர்த்தஞாயிறு தாக்குதலின்போது ஜனாதிபதி என்றவகையில் தனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை ஈடேற்றத் தவறியமையால் அந்த தவறுக்காக நூறு மில்லியன் (10 கோடி) நட்டஈடு விதிக்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன தான் அமைச்சரவையில் இருக்கின்றவேளையில் தான் இளைப்பாறுகின்றவேளையில் தனக்கு தேவையான இல்லத்தை அமைச்சரவையில் தான் அமர்ந்திருந்தே அங்கீகரித்துக் கொண்டார். அவற்றுக்கு ரணில் விக்கிரமசிங்க கையை உயர்த்தினார். சஜித் கையை உயர்த்தினார். மைத்திரிபால சிறிசேன இளைப்பாறியபின்னர் இருப்பதற்காக கொழும்பில் பெறுமதிமிக்க பாரிய வீடு கொடுக்கப்பட்டது. அந்த வீடு அவருக்குச் சொந்தமானதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வீட்டிலிருந்து வெளியே இழுத்துப்போடப்பட்டார். இவர்களுக்கு வெட்கமில்லை. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க பொலீஸ் மா அதிபரை நியமித்தார். அந்த நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும். அரசியலமைப்புப் பேரவையின் ஐவர் அங்கீகரிக்க வேண்டும். அரசியலமைப்புப் பேரவையின் நால்வர் அங்கீகரித்தார்கள். இருவர் எதிர்த்தார்கள். இருவர் அமைதியாக இருந்தார்கள். வாக்குகளின் எண்ணிக்கை சமமானதாக அமையின் சபாநாயகர் தனது அறுதியிடும் வாக்கினைப் பாவிக்கலாம். இந்த இடத்தில் வாக்குகள் சமமானதாக இல்லை. எனினும் சபாநாயகர் ஆதரவாக வாக்கினை அளித்து பொலீஸ் மா அதிபரை நியமித்தார். அந்த நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும். பட்டப்பகலில் இவ்வாறு அப்பட்டமாகவே சட்டத்தை மீறுகின்ற, அரசியலமைப்பிற்கு முரணாக செயலாற்றுகின்றவர்கள் " தேசிய மக்கள் சக்தி வந்தால் சனநாயகம் இல்லாதொழியும்" என கூறுகிறார்கள். ஜனநாயகத்தை மீறுபவர்கள், பாரியளவிலான குற்றச்செயல் புரிபவர்கள், ஊழில்பேர்வழிகளை பாதுகாப்பவர்கள் அவர்களே. தேசிய மக்கள் சக்தி மக்களை பயமுறுத்துதல் பற்றி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத் திட்டத்தில் இருக்கின்றது.
அவர்களின் திட்டத்தில் இரண்டாவதாக இருப்பது மக்களை ஏமாற்றுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும். "இது நாடு சிதைவடைந்துள்ள ஒரு தருணமாகும். இது புதியவர்களைக் கொண்டுவந்து பரீட்சித்துப்பார்க்க உகந்த தருணமல்ல. கடினமான நேரமாகும்" அதாவது பழக்கப்பட்டவர்களான ரணிலுக்கே கொடுங்கள் என்பதற்கான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதாகும். அவர்கள் யார்? இந்த பொருளாதாரத்தை வீழ்த்தியவர்கள். எமது நாட்டில் டொலர் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியவர்கள், உற்பத்தியை வீழ்த்தியவர்கள். எம்பிலியிட்டியவில் பல
தசாப்தங்கள் பழைய கடதாசி ஆலைக்கு சிறந்த சந்தையை அமைத்திருந்தால் இன்று உலகில் மிகவும் முன்னேற்றகரமான தொழிற்சாலையாக அமைந்திருக்கக்கூடும்.
ரணில் விக்கிரமசிங்கவின் பியகம தொகுதியில் உரத் தொழிற்சாலையொன்று இருந்தது. 1982 இல் 50,000 மெட்றிக் தொன் யூரியா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பயிர்ச்செய்கைக்கு இந்த உரப் பிரச்சினை எவ்ளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? அந்த தொழிற்சாலையை இந்த ரணில் விக்கிரமசிங்கவே நாசமாக்கினார். ஹிங்குரான, கந்தளாய் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. துல்ஹிரிய, மத்தேகொட, பூகொட புடவைத் தொழிற்சாலைகள் இருந்தன. அவற்றை விற்று மூடிவிட்டார்கள். அவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் அல்ல. பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள். உலகில் எங்கேயும் ஒரு நாட்டை வீழ்த்தியவர்கள் அதனை மீட்டெடுத்ததில்லை. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியத்து புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டே நாடுகளைக் கட்டியெழுப்பியுள்ளன.
ரணிலின் யூரியா கெம்பேனின் அடுத்த வாதம்தான் 3% எப்படி 51% ஆக அமையுமெனும் கணிதமாகும். கணிதத்தின்படி நினைத்துப்பார்க்க முடியாததுதான். எனினும் அரசியல் என்பது கணிதமல்ல. கணிதத்தின்படி அறுபத்தொன்பது இலட்சம் எடுத்த கோட்டாபய இன்னமும் ஜனாதிபதியாக இருக்கவேண்டுமல்லவா. அரசியல் என்பது சமூகவியலாகும். மக்கள் எவ்வாறு எழுச்சி பெறுவார்கள்? பிரச்சினைகள் எவ்வாறு தோன்றும்? பிரச்சினைகளை தாங்கிக்கொள்வது எவ்வாறு? அந்த பிரச்சினைகளுக்கு பிரதிபலிப்புச் செய்வது எவ்வாறு? இன்று நாடு முழுவதிலும் ஒலிக்கின்ற குரல் "இந்த நாட்டை நாசமாக்கியவர்களை விரட்டியடித்திட வேண்டும்" என்பதாகும்: அது கணிதமல்ல. சமூகவியல். மக்கள் சிந்திக்கின்ற விதம் மாற்றமடைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலின்போது கணிதவியலில் மாத்திரமல்ல, சமூகவியலிலும் வெற்றிபெறுவது தேசிய மக்கள் சக்தியே என்பது தெளி்வானதாகும்.
அவர்கள் எமக்கு எதிராக ஒன்றுசேர்வார்கள். அவர்களின் பணத்தைப் பிரயோகித்து, தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் விளப்பரங்களைப் போட்டு நான் கூறியவகையிலான பிரச்சாரத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்வேறு பாணியிலான குறைகூறல்கள் எழுகின்றன. அத்தகைய அவதூறுகளுக்கு பதிலளித்திட நாங்கள் நேரத்தை செலவிடப்போவதில்லை. குறைகூறல்கள், சேறுபூசுதல்கள் மூலமாக தேசிய மக்கள் சக்தி்யை பலவீனப்படுத்த நிலவிய காலம் கடந்துவிட்டது. எமக்கு எதிராக அனைத்துமே திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் தோல்விகண்டுள்ளன. நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான எமது பயணத்தை தொடர்வோம். அதன் பிரதானமான பங்குதான், எமது நாட்டின் பொருளாதாரத்தின் திரும்பற்புள்ளியான பெண்களின் விழித்தெழல். திசெம்பர் 30 ஆந் திகதி அதுவரை இலங்கை வரலாற்றில் பிரமாண்டமான பெண்கள் எழுச்சியை மாத்தறையில் வெளிக்காட்டினோம்.
அவர்கள் அதற்காகவே அதிகம் பதற்றமடைந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள் அரசியல் ஆண்களின் வேலையென்று. பெண்கள் முனைப்பான அரசியலில் பிரவேசிக்க மாட்டார்களென, அரசியல் தமது வகிபாகமென விளங்கிக்கொள்ள மாட்டார்களென அவர்கள் நினைத்தார்கள். பெண்கள் சதாகாலமும் ஆண்கள் தரப்பினரை அரசியலில் வைத்துவிட்டு பெண்கள் மௌனமாக இருந்தார்கள். எமது பெண்களை துன்பங்களுக்கு இலக்காக்கி, நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கி, அந்த நிர்க்கதியில் இருந்து விடுபட எதையாவது கொடுத்து தமது பக்கத்திற்கு தி்ருப்பிக்கொள்ள முடியுமென நினைத்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் புதிய வேலைத்திட்டம்தான் அஸ்வெசும, 20 கிலோ அரிசி, காணி உறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுதல். பழைய மக்கள் என நினைத்தே அவர்கள் கணிக்கிறார்கள். இப்போது இருப்பவர்கள் புதிய மக்கள். உலக வரலாற்றில் அண்மைக்காலத்தில் மக்கள் வீதிக்கு வந்து ஏழு மாதங்களுக்கு மேற்பட்ட காலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, இரத்தினபுரி, மாத்தறை, அநுராதபுரம் , காலிமுகத்திடலில் நாடுபூராவிலும் மக்கள் வெளியில் இறங்கி ஆட்சியாளனை விட்டியடித்தார்கள். இப்போது இருப்பவர்கள் உலக வரலாற்றில் சாதனை படைத்த மக்களாவர். அன்று இருந்த மக்களல்ல இன்று இருப்பவர்கள் என்பதை ரணில் விக்கிரசிங்காக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
Post a Comment