Header Ads



டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடையும்


ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து, ரூபாவின் பெறுமதி வலுவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை இன்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டார். 


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது.


ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.


தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளோம்.


இந்த நிலையில் இருந்து வெளிவர பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஓரளவு நிவாரணம் வழங்கக்கூடிய நிலையை அடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. டொலரை வீழ்த்தி ரூபாவை உயர்த்துவது இவருடைய வழிகாட்டலில் மத்திய வங்கி செய்யும் ஒரு வீணாப்போன திட்டம். அதன் நீண்ட கால பாதிப்புக்கள் நிச்சியம் இலங்கையின் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளிவிடும். அரசியல் இலாப நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த அடாவடித்தனத்தை யாரிடம் போய் முறையிடுவது. இந்த நாட்டு மக்களுக்கு இறைவன் தான் உதவி செய்ய வே்ண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.