பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக ஷெபாஸ் ஷெரிஃப் பதவியேற்றுள்ளார்.
பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப் (Shehbaz Sharif) பதவியேற்றுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி (Arif Alvi), ஷெபாஸ் ஷெரிஃப்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடந்த மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
கூட்டணி கட்சிகள் இணைந்து ஷெபாஸ் ஷெரிஃப்-ஐ பிரதமராக தெரிவு செய்ததன் அடிப்படையில், அவர் தற்போது பதவியேற்றுள்ளார்.
Post a Comment