திருமண விருந்தில் பங்கேற்ற 172 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொது சுகாதார பரிசோதகரின் தகவலுக்கமைய, விருந்தில் கலந்து கொண்ட மூன்று வைத்தியர்கள் உட்பட 172 பேர் தெபரவெவ, லுனுகம்வெஹர, அம்பலாந்தோட்டை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்தள அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் விருந்தின் போது இந்த அவசரநிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் உணவு வழங்கிய பிரபல ஹோட்டல் நிர்வாகம் நோய்வாய்ப்பட்டால் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹோட்டல் கடமைப்படவில்லை என தெரிவித்துள்ளது.
எனவே, இதை மேற்கொண்டு எடுத்து செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த நிர்வாகம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் 200 பேர் இரவு உணவிற்கு ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், 280 பேர் வந்திருந்ததால் மணமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் சாப்பிடுவதைத் தவிர்த்ததாகவும் சம்பவத்தால் வேதனையடைந்த வர்த்தகர் சமரவிக்ரம தசநாயக்க சந்திரரத்ன தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் சுகவீனமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை வசிப்பவர்கள் அல்ல என்பதனால் தகவல்களைப் பெறுவது சிரமமான காரியமாக உள்ளதாகவும், மல மாதிரிகளை பரிசோதித்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
Post a Comment