Header Ads



நம்பர் 1 இடத்தை இழந்த எலான் மஸ்க், உலக செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் முதலிடம்


உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) முதலிடத்துக்கு முன்னேயுள்ளர். இன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.‍


இருவரின் சொத்து மதிப்பு

ஜெஃப் பெஸோஸின் தற்போதைய சொத்து நிகர மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அதே சமயம், இதற்கு முன் முதலிடம் வகித்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து நிகர மதிப்பு 198 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.


2021 ஜனவரியில் எலான் மஸ்க் 195 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர சொத்து மதிப்புடன் பெசோஸை வீழ்த்தி முதன் முறையாக உலகின் நம்பர் 1 செல்வந்தர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் செல்வந்தர்கள் தரவரிசை

அண்மைய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, LVMH இன் நிறுவனர் அர்னால்ட்டின் நிகர சொத்து மதிப்பு 197 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. குறித்த தரவரிசையில் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


அதைத் தொடர்ந்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் 179 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 150 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.


இதேவேளை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் முறையே 11 மற்றும் 12 ஆவது இடங்களில் உள்ளனர்.


அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 115 பில்லியன் டொலர்களாகவும், அதானியின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்கத்கது.

No comments

Powered by Blogger.