உலகிலேயே பாசம் மிக்க தந்தை
உலகிலேயே மிகவும் தியாகமும், அர்ப்பணிப்பும் கொண்ட தந்தையாக ஆண் பென்குயினே கருதப்படுகிறது. இப்படம் அண்டார்டிகா கடற்கரையில் 5000 க்கும் மேற்பட்ட ஆண் பெங்குவின்கள் கடும் குளிர்காலத்தில் முட்டைகளை அடைகாக்கும் காட்சியாகும்.
பெண் பென்குயின்களை பொறுத்தவரை முட்டையிட்ட பின்னர் ஆண் பென்குயின்களிம் அவைகளை ஒப்படைத்து விட்டு கடும் குளிரிலிருந்து தப்பிக்கவும், உணவு தேடவும் கடலுக்கு ஓடுவிடுகின்றன.
இந்த ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும் இக்காலத்தில் சுமார் 115 நாட்கள் உண்ணாமல் குடிக்காமல், விரதமிருந்தவாறு, முட்டைகள் பனி பட்டு அழுகிப்போகாமல், பனிக் காற்று படாமல் சூடு தேடி தோளோடு தோள் சேர்ந்து, தலைகுனிந்த நிலையில் முட்டைகளை அடைகாக்கின்றன. குளிர்காலம் முடியும் வரை இந்த தியாகம் தொடரும்.
இதனால்தான் ஆண் பென்குயின்கள் உலகிலேயே தனயன் மீது மிகவும் பாசமுள்ள தந்தையாக கருதப்படுகின்றன.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment