தற்போதைய நிலையில் இஸ்ரேலுடன் ஏற்படுத்தப்படும், புதிய உறவுகள் குறித்து இம்தியாஸ் Mp அதிர்ச்சி
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
போர் பதற்றம் சூழ்ந்துள்ள செங்கடலுக்கு எமது இலங்கை மாதாவின் பிள்ளைகளை அனுப்புவது, இஸ்ரேலுடன் நேரடி விமான சேவை, இஸ்ரேலிய அமைச்சரின் இலங்கை விஜயம் என பல விவகாரங்கள் அண்மைக்காலமாக அவசர அவசரமாக நிகழ்ந்து வருகின்றன.
சர்வதேசத்துடனான தொடர்புகள் பிரதானமானவை. நாம் அணிசேரா கொள்கையை கொண்டவர்கள். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஏதேனும் அணி சார்ந்ததாக இருக்கிறதோ அல்லது இஸ்ரேல சார்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளதா என சிந்திக்கத் தோன்றுகிறது.
ஒடுக்கப்படும் பலஸ்தீன் மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டையே கடந்தகால இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருந்தனர்.
பெரும்பான்மை இலங்கை மக்களிடையே பலஸ்தீன் சார்பிலான அனுதாபமும் உள்ளது.
காசாவின் நிகழ்தப்படும் மனித குலத்திற்கெதிரான போருக்கெதிராக, முழு உலக மக்களும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், இஸ்ரேலிய அமைச்சரின் இலங்கை விஜயம், அவருடன் ஏன் அவசர அவசரமாக உடன்படிக்ககைள் கைச்சாத்திடப்பட வேண்டும்..?
போர் பதற்றம் நீடித்து, மக்கள் தினமும் கொல்லப்பட்டு, சர்வதேச அமைப்புக்களினால் போர்க் குற்றம் நிகழ்தப்பட்டுக் கொண்டிருப்பதாக, தினமும் ஆதாரமான அறிக்கைகள் வெளியாகும் நிலையில், தற்போதைய நிலையில் அதனுடன் தொடர்புடைய நாட்டுடன் ஏன் இந்த உறவுகள் எனவும் இம்தியாஸ் எம்.பி. மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.நா. சபை, ஐ.நா.பாதுகாப்புச் சபை,சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், உலக நாடுகள் எதனையும் துச்சமாக மதித்து அவற்றின் தீர்மானத்துக்கு விரோதமாகவும், மனித நேயத்துக்கு முற்றிலும் விரோதமாகச் செயல்பட்டு அநியாயமாக காஸா, பலஸ்தீன், லெபனான், யமன் போன்ற நாடுகளில் குழந்தைகளையும், எதிரிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் போர்வையில் சிறுவர்கள், பெண்கள் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இந்த பயங்கரவாத இஸ்ரவேலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அங்கு இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பசியுடனும் தாகத்துடனும் காயங்களுடனும் செத்து மடியும் போது ஜோர்டான், துபாய், சவூதி அரேபியா ஊடாக இஸ்ரவேலிய கொலைகாரர்களுக்கு உணவு அனுப்புவதற்கு முஸ்லிம் நாடுகள் இணக்கம் தெரிவித்து இஸ்ரவேலுக்கு உதவி செய்யும் போது இந்த நாடுகளுக்கு என்னவென்று கூறுவது எனத் தெரியாமல் இந்த முஸ்லிம் உம்மத் தவிர்க்கின்றது. இந்த அநியாயத்தைப் பார்க்க உலகில் நியாயமான நாடுகள் இல்லையா?
ReplyDelete