ரஞ்சனின் வேதனை
தனது இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசவில்லை என முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ராமநாயக்க ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏழு வருடங்களாக எனது குடியுரிமையை இழந்துள்ளேன். ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கு அமைவாக என்னால் அரசியலில் பேச முடியாது. எனவே, என்னை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு நான் கட்டுப்படுகிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். .
2021 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ராமநாயக்க கடந்தாண்டு தற்போதைய ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டார்.
எந்தவிதமான இராஜதந்திரமும் அரசியல் சாணக்கியமும் இன்றி வாய் இருக்கின்றது என்பதற்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வௌியிலும் அத்தனையையும் கக்கி வந்த உமக்கு இந்த நாட்டின் சட்டம் சரியாக செயல்பட்டிருக்கின்றது. எனவே உமது பிரச்சினையை நீர்தான் சட்டத்தின் முன்னர் சென்று நியாயத்தைத் தேட வேண்டியிருக்கின்றது. நாம் அறிந்தமட்டில் உமது தனிப்பட்ட நடத்தைகள் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித ஒழுக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கும் போது மக்களுக்கு என்ன உதவிகள் செய்தாலும் இறைவனின் சட்டம் உமக்கு கருணைகாட்டுமா என்பது எமக்குத் தெரியாது.
ReplyDelete