இஸ்லாமியர்கள் இந்நாட்டிற்கு ஒருபோதும் அநீதி இழைக்கவில்லை, நபிகளாரின் வாழ்க்கை முறையை அவர்கள் பின்பற்றினாலே போதும்
இலங்கையில் கடந்த ஓர் தசாப்தமாக சிவில் அமைப்புகளைக் கொண்டு இயங்கிவரும் தேசிய ஷூரா கவுன்சில் எனும் அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருட சுதந்திர தினம் வரும் அடுத்த வாரம் இந்த நாட்டில் வாழும் மும்மொழிகளிலும் நான்கு இனத்தில் உள்ள புத்திஜீவிகளை அழைத்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்களின் பங்களிப்பு, நமது முன்னைய முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் தனவந்தர்கள் வியாபாரிகள் பண்டைய காலந்தொட்டு சிங்கள அரசுகளுடன் இணைந்து என்ன பங்களிப்பினை செய்தார்கள்? என்ற சொற்பொழிவினை நடாத்திவருகின்றது
. ந்த வகையில் கடந்த வாரம் பெப்ரவரி 07ஆம் திகதி 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா கவுன்சில் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா கொழும்பு 7 ல் உள்ள மண்டபத்தில் இச் சபையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரனி ரீ.கே. அசூர் தலைமையில் விசேட சொற்பொழிவொன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் ,புத்திஜீவிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இந் நிகழ்வில் தலைமை உரையை தலைவர் ரீ.கே. அசூர் நிகழ்த்தினார். இச் சபையின் உப தலைவர் ஜாமியா நளீமியா நிறுவனத்தின் இஸ்லாமிய கற்கை நெறித் பீடாதிபதி அஷ்ஷேக் எஸ்.எச்.எம் பழீல், வல்பொல ராகுல நிறுவனத்தின் பணிப்பாளர் களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கல்கந்த தர்மானந்த தேரர், ஜனாதிபதி சட்டத்தரணியுமான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ராஜதந்திரியுமான எம்.எம். சுகைர் உரை நிகழ்த்தினார்கள். அத்துடன் இச் அமைப்பின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரனி ரசீட் இம்தியாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
இங்கு உரையாற்றிய கல்கந்த தர்மானந்த தேரர் -
நான் அம்பாறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அங்கு பழம் பெரும் கிராமங்களான உகன,பரனகலே போன்ற பழைய கிராமங்கள் இருந்தன. மாத்தளே கலவரத்தின் பின் பதுளை-மையங்களை வழியாக சிங்கள மக்கள் அம்பாறையில் குடியேறினார்கள். 1952ல் சேனாநாயக்க சமுத்திரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இங்கு வந்து குடியேறினார்கள். ஆனால் அம்பாறை பழைய பெரும் வாழ்ந்த மக்கள் அக்கரைப்பற்று, கல்முனை ,காத்தான்குடி பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் இணைந்து ஐக்கியமாக வியாபாரம் மற்றும் பல விடயங்களில் இனைந்து வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் இந்த நாட்டினை ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆட்சியே ஆட்சி செய்து வந்தார்கள். ஆனால் இந்த நாட்டில் வாழும் சகல சமூகங்களும் இணைந்து பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரத்தினை பெற்றாலும் இவ்வருடம் 76 வது சுதந்திரத்தினைக் கொண்டாடினாலும் இதுவரை 5 வீதமான சுதந்திரமே நமக்கு கிடைத்துள்ளது மிகுதி 95 வீதமான சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் நமது நாட்டின் சொத்துக்களையும் அனுபவிக்கின்றனர்.
இதற்கு உதாரனம் இந்தியா, சுமேரியா போன்ற நாடுகள் ஆகும். இந்தியாவில் கூட இன்னும் சகல இனங்களையும் இணைத்து ஜக்கியம் ஏற்படவில்லை. அசோகன் காலத்திலிருந்து தெற்கு இந்தியாவில் பிரச்சினைகள் இருந்து தான் வருகின்றன. இவற்றில் குலம், கணவன் மனைவி ,சிறுவர் திருமனம் போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. ஆங்கிலம் கற்பதற்காக சிறந்த ஆங்கிலம் இலங்கை சிறந்து விளங்கியது அப்போது இந்தியா, மாலைதீவு என மொழி கற்பதற்காக இலங்கை வந்தனர். ஆனால் தற்பொழுது அநேகம் பேர் இந்தியா சென்று மொழி கற்கக் கூடிய நிலைக்கு வந்துள்ளது.
இந்த பூமியில் பிறந்த சிங்கள,தமிழ் ,முஸ்லிம்கள் ஒர் குடும்பம்போல் இந்த நாட்டிலேயே வாழ்ந்து மடிய வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர். இஸ்லாமியர்கள் இந்த நாட்டிற்கு ஒரு போதும் அநீதி இழைக்கவில்லை. அவர்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்க்கை முறை, ஆட்சி முறையை அவர்கள் பின்பற்றினாலே போதும். அவர் அராபியர்கள் ஒன்று படுத்துவதற்காக அரபு பிரதேசத்தில் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி ஒரு நற் பாடமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
அவரது சகோதரத்துவ, ஏகத்துவ கொள்கையாகும். இலங்கையில் அவ்வப்போது இந்த நாட்டின் சிங்களத் தலைவர்களோடு இணைந்து முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியில் அங்கத்துவம் வகித்துள்ளார்கள். கடந்த இரண்டு தசாப்த காலத்திற்கு உள்ளே தனியான முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் உருவாகின. என கல்கந்த தேரர் அங்கு உரையாற்றினார்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment