தனது மகனை அடித்துக்கொன்ற தந்தை - ஏன் இச்சம்பவம் நிகழ்ந்தது..?
குபுக்கெட்டே பொலிஸ் பிரிவின் வெல்காலநெல்லிய பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (18) நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
குபுக்கெட்டே வெல்காலநெல்லிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30 வயது இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞன் சம்பவதினமான நேற்றிரவு தனது தந்தையிடம் போதைப்பொருள் பாவனைக்கு பணம் கேட்டு பிரச்சனைபட்டபோது தகப்பன் சுத்தியலினால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடய சந்தேகநபரான உயிரிழந்த இளைஞனின் 60 வயதான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குபுக்கெட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்
Post a Comment