Header Ads



தேசத் துரோகம் செய்த ஹரீன் பெர்னாண்டோவுக்கு, மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை


இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென என பிவித்துரு ஹெல உறும தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


இவ்வாறாக கருத்தை வெளியிட்டுள்ளதன் மூலம் அமைச்சர் ஹரீன் தேசத்துரோக குற்றத்தை இழைத்துள்ளார், அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 


அமைச்சரின் இக்கருத்து, அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் படி எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுவதாகும்.


இதன்படி அமைச்சர் ஹரீன் அமைச்சர் பதவியை வகிக்க தகுதியற்றவர். மறுபுறம், நமது நாட்டை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகச் செயலாகும்.


தேசத்துரோகம் என்பது ஒரு அரசனுக்கு துரோகம் செய்வதல்ல. நமது தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகத்திற்கான தண்டனை மரணம்.


எளிமையாகச் சொல்வதானால், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தைச் செய்துள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.   

No comments

Powered by Blogger.