Header Ads



சரத் பொன்சேக்காவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அறிவுரை


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தவிசாளர் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைப் பொதுவெளியில் பேசுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் நடத்தப்பட்ட பேரணியை சரத் பொன்சேகா விமர்சித்திருந்தார்.


அத்துடன், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டமை குறித்தும் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபர்களின் சொத்து அல்ல என்று கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் அவர் சாடி வருகின்றார்.


இதற்கமையவே ரஞ்சித் மத்தும பண்டார  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


வற் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


குறித்த போராட்டம் வட் வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கொழும்பு, நகரமண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் போரணியில், நாடளாவிய ரீதியாக இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


குிறத்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.