Header Ads



சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்


சவூதி அரேபியாவின் ‘ஸ்தாபக தினம்’ என்பது மூன்று சவூதி மாநிலங்கள் தனித் தனியாக நிறுவப்பட்டு, பின்னர் அவை ஒருங்கிணைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. இமாம் முஹம்மது பின் ஸுஊத் அவர்கள் முதன் முதலாக, திரய் யாவைத் தலைநகராகக் கொண்ட சவூதி இராச்சியத்தை பெப்ரவரி 22, 1727 ஆம் திகதி நிறுவினார்.  


அதனைத் தொடர்ந்து, இமாம் துர்கி பின் அப்துல்லா பின் முஹம்மது பின் ஸுஊத் அவர்கள், ரியாதைத் தலைநகராகக் கொண்டு இரண்டாவது சவூதி இராச்சியத்தை, கி.பி. 1824 இல் உருவாக்கினார்கள். அடுத்த கட்டமாக, மன்னர் அப்துல்அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அவர்கள், மூன்றாவது சவூதி அரசை, கி.பி 1902 இல் ரியாதைத் தலைநகராகக் கொண்டு நிறுவியதோடு, இம்முப்பெரும் மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, 1932 ஆம் ஆண்டு ‘சவூதி அரேபிய இராச்சியம்’ என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள்.


இந்த  ஸ்தாபக தின கொண்டாட்டமானது, சவூதி அரேபியா ஸ்தாபிக்கப்பட்டது முதல் அது தற்போதைய வளமான சகாப்தத்தை அடையும் வரையான அதன்  மரபு மற்றும் ஆழ்ந்த வரலாற்றுப் பின்னணி போன்றவற்றை வெளிக்கொணர்வதில், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆகியோர் கொண்டுள்ள அக்கறையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகின்ற சிறந்த சான்றாகும்.


இதன் அடிப்படையில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் சஊத்  அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி இருபத்தி இரண்டாம் தேதியை அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு அதிகாரபூர்வ விடுமுறையாகவும், தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கும் ஒரு விஷேட அரச ஆணையை வெளியிட்டார்.


ஸ்தாபக தினத்தை கொண்டாடுவது என்பது, சவூதி அரேபியாவின் உறுதியான அடித்தளத்தைப் பற்றி  அதன் உயர் விழுமியங்கள், கலாசாரம், சமூக பாரம்பரியம் மற்றும் அதன் சிறந்த வரலாறு, நாகரிகம், ஆகியவற்றில் பெருமை கொள்வதைப் பிரதிபலிக்கிறது.


இறுதியாக, இந்த பொன்னான சந்தர்ப்பத்தில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் சஊத்  அவர்களுக்கும் மற்றும் பட்டத்து இளவரசரும்  பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அவர்களுக்கும் மற்றும் சவூதி அரேபிய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது நல் வாழ்வுக்காகவும் அவர்களுக்கு உதவியும் வெற்றியும் அளித்து, எமது நாட்டின் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும், செழிப்பையும் பேணிப்பாதுகாக்குமாறும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.


இலங்கை குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவர்

காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

No comments

Powered by Blogger.