வெறித்தனமான வேகத்தில் சிதறாமல் இருக்கும் மனிதர்களும், அல்குர்னின் கேள்வியும்...!!
இந்த விருவிருப்பான சூழற்சியை நாம் ஒரு சொட்டும் உணர்வதில்லை. இத்தகைய வெறித்தனமான வேகத்தில் நாம் ஆடாமல் அசையாமல் சிந்தாமல் சிதறாமல் இருக்கிறோம்.
புவியீர்ப்பு என்ற ஒரு மறைவான சக்தி நாம் சிதறிப்போகாமல் நம்மை கெட்டியாக கட்டிப்பிடுக்கிறது என்று நாம் படித்துள்ளோம். பரந்த கடல்கள், ராட்சத மலைகள், பிரமாண்டமான கட்டிடங்கள் மனிதர்கள் என யாவற்றையும் ஈர்த்து இழுத்துப்பிடிக்கும் பலமான சக்தியது!
அதேவேளை பறவைகளை, பூச்சிகளை பறக்கவிடாமல் ஈர்த்து தடுக்க முடியாத அளவுக்கு பலவீனமான ஒரு சக்தியும்தான்.
மண்ணில் இந்த மறைவான சக்தி இருப்பது போலவே விண்ணிலும் அந்த மறைவான சக்தி உள்ளது. ஆகாய சுற்றுப்பாதையில் கோல்மண்டலங்களுக்கிடையில் மோதல்கள் நடக்காமல் அது தடுக்கிறது.
அனைத்தும் அதற்குரிய சுற்றுப்பாதையில் முந்தாமல் பிந்தாமல், முட்டாமல் மோதாமல், சீராக சிறப்பாக சுழல்கின்றன.
((( ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன.))
📖 அல்குர்ஆன் : 36:40
((அவனே ஏழு ஆகாயங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; அருளாளன் படைப்பில் தாறுமாறாக எதையும் நீர் காணமாட்டீர்; (இன்னொரு முறை) பார்வையை செலுத்திப் பாருங்கள்! (ஆகாயத்தில்) ஏதாவது குறைபாட்டை காண்கிறீர்களா?
📖 அல்குர்ஆன் : 67 : 3
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment