Header Ads



இந்தியாவின் வலையில், வீழ்ந்ததா ஜே.வி.பி...?


- Anzir -


இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள JVP, (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அனுரகுமார திஸாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்து இன்று (05)  பேச்சு நடத்தினார்.


கலாநிதி ஜெய்சங்கர் தனது X இல்


'எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது ஒரு நல்ல விவாதம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில் இலங்கை வந்த இந்திய இராணுவத்திற்கு எதிராக மறைமுக தாக்குதல்களில் ஜே.வி.பி. ஈடுபட்டிருந்தது.


இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும், அது அறிமுகப்படுத்திய மாகாண சபை முறைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களையும் ஜே.வி.பி. மேற்கொண்டிருந்தது.


இந்நிலையில்  தற்போது ஜே.வி.பி.க்கும், இந்தியாவிற்பு புது உறவு மலர்ந்திருப்பது தெளிவாகிறது.


இலங்கையில் யார் ஆட்சியமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அவர்களின் பக்கம் தனது நலன்களுக்காக சாய்வது, இந்தியாவின் இயல்பு என ஒரு மூத்த அரசியல்வாதி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.