புகைப்படம் எடுத்தல், உணவுகளை வழங்கும் ஆபத்தான செயற்பாடுகளை தவிர்க்குமாறு கோரிக்கை
ஹபரணை - தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு அருகில் சில சுற்றுலாப் பயணிகள் சென்று புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவுகளை வழங்கும் ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
வீதியின் அருகே வரும் காட்டுயானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் உள்ளதால், அந்த விலங்குகள் தினமும் இந்த வீதியில் சுற்றித்திரிகின்றன.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ளனர்.
இது ஆபத்தான செயற்பாடாகும்.
காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
எனவே சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
Post a Comment