அரசாங்கம், பாராளுமன்றம், சட்டமா அதிபர், சபாநாயகரின் சட்டத்திற்கு முரணான செயற்பாடு
உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த பல திருத்தங்களை கவனத்திற்கொள்ளாமல் நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் Transparency International Sri Lanka நிறுவனம் அதிருப்தி வௌியிட்டுள்ளது.
இது அரசாங்கம், பாராளுமன்றம், சட்டமா அதிபர், சபாநாயகரின் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் என அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாக ஏதேனும் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு பாராளுமன்றம் முயற்சிக்கும் போது அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு பிரஜைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமை இதன்மூலம் பாரதூரமாக மீறப்பட்டுள்ளதாக Transparency International Sri Lanka நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றம் ஒருபோதும் இல்லாதவாறு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதை கண்டிப்பதாகவும் உடனடியாக சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment