Header Ads



தீவிர குடிகாரனாக மாறிய கணவனின் உடலை ஏற்கமறுத்த மனைவி


கேகாலையில் ரயில் விபத்தில் உயிரிழந்த கணவரின் சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.


கடந்த 14ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளானவர் 48 வயதுடைய நபரொருவராகும்.


கடந்த 2021ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான குறித்த நபர் உழைக்கும் பணத்தை தீவிர குடிகாரனாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் மது போதையில் சென்று குறித்த நபர் ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.


இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, அவரது சடலம் மீட்கப்பட்டு கேகாலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மனைவியை அழைத்து சடலத்தை ஏற்குமாறு கூறிய போது தன்னை குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனின் உடலை ஏற்க முடியாதென அவர் மறுத்துள்ளார்.


தான் விவாகரத்து செய்யவில்லை. ஆனாலும் உடலை ஏற்க முடியாது என்றும் கூறிவிட்டு பிரேத பரிசோதனை மேசையில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்கை எடுத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.


அங்கு மரண விசாரணை அதிகாரி டில்ஷான் கந்தேமுல்ல, கணவரின் உடலை ஏற்க மறுத்து மின்விளக்கை மட்டும் எடுத்துச் சென்றதற்கான காரணங்களை விளக்கமளிக்க விசாரணை நடத்தினார்.


மூன்று பிள்ளைகளின் தாயான தான், உடலை எடுத்து இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள தனக்கு சக்தி இல்லை என்று கூறினார்.


அதன்பின், மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் மின்விளக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

No comments

Powered by Blogger.