Header Ads



கிழக்கின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக றிம்சான் நியமனம்


-அபு அலா- 


கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.


2015/2016 ல் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற  சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட (MLT) பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.


அவர் தனது கடமையினை நாளைய தினம் (26) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பொறுபேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.