இறந்து விட்டதாக கருதப்பட்ட தாய், கவ்பத்துல்லாவை வலம் வருவதை கண்ட மகள்
பலஸ்தீனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் வாழ்பவர்.
பலஸ்தீன யுத்தத்தில் தனது தாய் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, ஃபலஸ்தீன/ இஸ்ரேல் மோதலில் தகவல் பறிமாற்றங்களும் பாதிக்கப்பட்டிருந்ததால், தனது தாய் இறந்து விட்டதாக முடிவு செய்திருந்தார்.
இரு மாதங்களுக்கு பிறகு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் உம்ராவுக்கு வருகை தந்துள்ளார்.
மஸ்ஜிதுல் ஹாரமில் தவாஃப் செய்யும் போது, அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை.
ஆம்..!
இவ்வளவு நாள் இறந்து விட்டதாக கருதிக் கொண்டு இருந்த தனது தாய் மற்றும் சில உறவுக்காரப் பெண்களும் மதாஃபில் தவாஃப் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார்.
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒரு சேர..
தனது தாயிற்கே தெரியாமல் தனது முகத்தை மறைத்தவாறே சென்று தனது தாயின் முன்பு நிற்கிறார்...!
அதன் பிறகு என்ன நடந்தது?! என்பதைக் காணுங்களேன்..
தாயிற்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பை பாருங்களேன்.
Post a Comment