இந்த மண், எந்த மண் தெரியுமா...? நம் முன்னனார்களின் வீரதீர சாகசங்கள்
இந்த மண்ணில்தான், தளபதி மூஸா பின் நுஸைர் குதிரையில் ஏறி சுற்றிவந்தார்.
இந்த மண்ணில்தான், இளவரசர் அப்துர் ரஹ்மான் தாஹில் அரசராக முடிசூடினார்.
இந்த மண்ணில்தான், இப்னு ஹஸ்ம் மார்க்கசட்ட தீர்ப்புக்களை வழங்கி வந்தார்.
இந்த மண்ணில்தான், இமாம் குர்துபி அல்குர்ஆனுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
இந்த மண்ணில்தான், இப்னு கல்தூன் பதிவேட்டில் வரலாற்றை பதித்துக் கொண்டிருந்தார்.
இந்த மண்ணில்தான், இப்னு ருஷ்த் சிகிச்சை அளித்தது வந்தார்.
இந்த மண்ணில்தான், இப்னுல் பைதார் மூலிகைகளால் மருந்து மாத்திரைகள் செய்து வந்தார்.
இந்த மண்ணில்தான்,அல்-இத்ரிஸி உலக வரைபடத்தை வரைய ஆரம்பித்தார்.
இந்த மண்ணில்தான், அப்பாஸ் பின் பிர்னாஸ் முதன் முதலாக விமானம் கண்டுபிடிக்க முயற்சித்தார்.
இந்த மண்ணில்தான், மூஸா கஸ்ஸானி வீரசூரனாக வீரமரணம் அடைந்தார்.
இந்த மண்ணில்தான், ஹாஜிப் பின் மன்ஸூர் மகாசேனனாக வலம்வந்தார்.
இந்த மண்ணில்தான், அப்துர் ரஹ்மான் அல்ஆபிகி, ஐரோப்பாவை கதிகலங்க வைத்தார்.
இந்த மண்ணில்தான், அபூ அப்துல்லாஹ் கிரனாடா சாவியை ஒப்படைத்துவிட்டு வந்தார்.
இந்த மண்ணில்தான், ஏறு வரிசையில் சிகரம் ஏறிக்கொண்டே இருந்தனர்.
இந்த மண்ணில்தான், இறங்கு வரிசையில் பள்ளம் இறங்கிக் கொண்டே இருந்தனர்.
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment