இஸ்லாமோஃபோபியாவின் எழுச்சி ஆபத்தானது
கனடாவின் ஒன்ராறியோவின் கேம்பிரிட்ஜில் உள்ள பள்ளிவாசலில் நடந்த சம்பவத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
'கேம்பிரிட்ஜ் இஸ்லாமிய மையத்தில் நடந்த அழிவு - மற்றும் நாடு முழுவதும் இஸ்லாமோஃபோபியாவின் எழுச்சி ஆபத்தானது வெறுக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று அவர் X இல் எழுதினார்.
'இந்தச் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய வெறுப்புக்கு எதிராக முஸ்லிம் சமூகங்களுடன் நிற்கிறேன். இஸ்லாமோஃபோபியாவை நாம் ஒன்றாக எதிர்கொண்டு போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திங்களன்று, வெறுப்பை தூண்டும் செயற்பாடுகள் பள்ளிவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய மையத்திற்கு போலீசார் அழைக்கப்பட்டனர்.
கனேடிய ஊடகங்களின்படி, பள்ளிவாசலில் வெறுப்பை தூண்டும் சின்னங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
Post a Comment