உலகப் பணக்காரனுக்கு அமைதிக்கான நோபல் பரிசா..?
உலகப் பணக்காரன் எலான் மஸ்க்குக்கு (Elon Musk) அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் (Marius Nilsen) முன்மொழிந்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
இதற்கிடையில், நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்துள்ளார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment