Header Ads



"சொன்னவர்கள் எல்லாம், செய்து காட்டியவர்கள் அல்லர்"


👉பிரபல எழுத்தாளி அஹ்லாம் மிஸ்தகாமி ஆண்களை அதிகம் விமர்சித்து எழுதியவள். ஆண்கள் விசயத்தில் பெண்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரித்தவர். ஆனால் கடைசியில் அவள் 4 முறை திருமணம் செய்து கொண்டாள் 


👉பிரபல பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் தனது கவிதைகளில் இஸ்ரவேலை கடுமையாக சாடினார். ஆனால், அவரது காதலி இஸ்ரவேல் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவளாக இருந்தாள்.


👉புகழ் பெற்ற அப்பாஸிய பேரரசு கால கவிஞர் அல்முதநப்பி தனது கவிதைகளில் தன்னை குதிரை வீரனாக சித்தரித்தார். வாள், ஈட்டி, அம்புகளிடம் தான் யாரென்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று புகழ்பாடினார். பின்னர் தன்னை கொலை செய்ய வந்தவர்களுக்கு அஞ்சி ஓடி கோழையாக மாய்ந்து போனார். 


👉பிரபல எழுத்தாளர் டேல் கார்னகி எழுதிய புத்தகம்தான் "மனக்கவலை வேண்டாம், வாழ்வைத் துவங்கு!" ஆனால் அவர் இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மாய்ந்து போனார். 


👉பிரபல எழுத்தாளர் ஜான் ஜாக் ரோஸோ குழந்தை வளர்ப்பு பற்றி புத்தகம் எழுதினார். ஆனால் அவர் தனது குழந்தைகளை அனாதை இல்லத்தில் சேர்ந்துவிட்டார்.


👉பிரபல உதைப்பந்தாட்ட வீரர் மரிடோனா வின் டீ-சேட்டில் "வேண்டாம், போதைப்பொருள்!" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமைப்படவர்களில் முக்கிய புள்ளியாக அறியப்பட்டார். 


👉பிரபல விளையாட்டு வீரர் பிலாட்டீனியின் டீ- சேட்டில் " வேண்டாம், ஊழல்!" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பிற்காலத்தில் மிகப் பெரும் ஊழல் வாதியாக அறியப்பட்டார்.


- Imran Farook -

No comments

Powered by Blogger.