இப்தாருக்காக செலவிடும் நிதியை, காசாவுக்கு அனுப்ப தீர்மானம்
- Mohamed Ali Sabry -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையான 'பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான சூழ்நிலைகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாக, "காசா குழந்தைகள் நிதியம்" ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.'
காஸாவில் இடம்பெறும் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டாெலர்களை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரமழான் மாதம் முழுவதும் எமது நாட்டவர்களிடமிருந்து நன்கொடைகளுக்காக அழைப்பு விடுக்கப்படும்.
ஜனாதிபதி அலுவலகம், பிரதமரின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன வழக்கமாக இஃப்தார் நிகழ்வுக்காக செலவிடும் நிதியை "காசாவின் குழந்தைகள் நிதிக்கு" அளிப்பதாக தீர்மானித்துள்ளது.
மேலும், அனைத்து அமைச்சுக்களும், அரச நிறுவனங்களும் தங்கள் வழக்கமான இப்தார் நிகழ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக இந்த ஆண்டு நிதியை குறித்த நிதியத்திற்கு பங்களிக்க ஊக்குவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment