"இவர்கள் நம்பகமானவர்களாக இருந்தால், தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுடன் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள்"
"யார் யாரெல்லாம் எங்கள் பக்கம் வந்து நிற்கிறார்களோ அவர்களின் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்." என்றான்.
புஹாரா நகர படைகள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். ஒரு அணி அவன் அறிவுப்புக்கு செவிசாய்த்தது, அவனுடன் கூட்டுச் சேர்ந்தது. மற்ற அணி மறுப்பை தெரிவித்தது.
பின்னர் செங்கிஸ் கான் இன்னொரு அறிவிப்பை தன்னுடன் வந்து சேர்ந்த கூட்டணிப் படைக்கு விடுத்தான். " நீங்கள் எங்களுடன் இணைந்து, மறுத்த படையணிக்கு எதிராக யுத்தம் செய்தால் புஹாரா நகர ஆட்சி அதிகார பொறுப்பை உங்களுக்கே வழங்குவோம்" என்றான். அவன் கட்டளைக்கு அந்தப் படையணி செவிசாய்த்தது. அந்த இரண்டு படையணிகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது.
இறுதியில், செங்கிஸ் கானுடன் கூட்டணி சேர்ந்த படை பெரு வெற்றி பெற்றது. ஆனால் அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில், செங்கிஸ் கான், தன்னுடன் கூட்டணி சேர்ந்த படைகளிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, அவர்கள் அனைவரையும் படுகொலை செய்யும் படி உத்தரவிட்டன்.
பின்னர் அவன் தனது பிரபலமான வாசகத்தை கூறினான்:
'இவர்கள் நம்பகமானவர்களாக இருந்தால், தங்கள் தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு, யாரென்றே தெரியாத எங்களுடன் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள்." என்றான்.
📖 அல்காமில் பித்-தாரீஹ்
✍ ஆசிரியர் / இப்னுல் அஸீர்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment