அமெரிக்காவிடமிருந்து அதிக, உதவி தேவை - மைத்ரிபால
அமெரிக்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக வொசிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பாரிய அதிகார அரசியலில் சிக்கியுள்ள, தமது நாடு தற்போது 'பெரிய உறுதியற்ற நிலைமையில் உள்ளது.
நாட்டின் குடிமக்கள் மோசமான வெளிநாட்டு கடன் நெருக்கடி, உயரும் பணவீக்கம், சுருங்கும் பொருளாதாரம் மற்றும் உணவு, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றில் இருந்து மீள முயற்சிக்கும் இலங்கை கொடுமையான வறுமையை எதிர்நோக்கி வருவதாக வொசிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலர் அஃப்ரீன் அக்தருடனான சந்திப்பை உள்ளடக்கிய தமது அமெரிக்கப் பயணம் - ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும், இலங்கைக்கான ஆதரவை மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையை தற்போதைய சூழ்நிலையில் இருந்து காப்பாற்றவும், ஒன்றிணைந்து செயல்படவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை வலியுறுத்துவதே தமது இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில், தற்போதைய அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிறைய ஒத்துழைப்பு உள்ளது.
இந்த உறவு வொசிங்டனில் இருந்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வொசிங்டன் டைம்ஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment