Header Ads



இறைவனின் அற்புதமான படைப்பு


மோனார்க் (Monarch Butterfly) பட்டாம்பூச்சிகளின் சாகசப் பயணம்.


லட்சக்கணக்கான மோனார்க் பட்டாம்பூச்சிகள் ஆண்டு தோறும் பனிக் காலத்தில் மிதமான வெப்ப சூழலைத் தேடி கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ நோக்கி சுமார் 3,220 கிமீ  நீண்ட இடப்பெயர்வை மேற்கொள்வதை 1975 ல் பறவையியல் வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 


இந்த சின்னஞ்சிறிய பூச்சினம், தான் இயல்பாக கொண்டுள்ள ஜெனடிக் திசைகாட்டி முலம் பகல் காலத்தையும், சூரிய நகர்வுகளையும் நம்பி இந்த அசாதாரண தூரத்தை துல்லியமாக கடக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் போது தான் உண்ணும் உணவுகளை தன் உடலில் கொழுப்பாக சேர்த்துவைத்து பயன்படுத்திக் கொள்கின்றன. 


இந்த இடப்பெயர்வின் போது அது கொண்டுள்ள கூட்டுக் கண்கள் சூரிய நகர்வுகளை கண்காணிக்கும் லென்ஸாகவும், அதன் கொம்பில் உள்ள சென்சார் கடிகாரம் அதன் தாளத்தை ஒழுங்குபடுத்திக் கொடுக்கவும் உதவிகின்றன. மேலும் இக்கடிகாரம் சமிக்ஞைகளை அதன் மூளைக்கு அனுப்புவதால், அது தன் பயணத்தை துல்லியமாக தொடர உதவுகிறது.!


மோனார்க் பட்டாம்பூச்சியின் இடப்பெயர்வு ரகசியங்கள் புதிரானதாக இருப்பதானது,   படைத்தோனின் படைப்பின அற்புதங்களை மேலும் கண்டறிய நம்மை ஊக்குவிக்கின்றன.


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.