ஷிரந்திக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அரசாங்க கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பௌத்த பிக்கு ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
முன்னாள் முதல் பெண்மணி பல ஓய்வூதியங்களையும் அரசாங்க கொடுப்பனவுகளையும் பெற்று வருவதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலஹாஹெங்குனாவேவே தம்மரதன தேரர் அண்மையில் கூறியிருந்தார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம், தம்மரதன தேரர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டவர்கள், எனவே இந்தக் கூற்றுக்கள் கடுமையாக நிராகரிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்துக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக மறுப்பது தான் அவர்களுடைய கொள்கை. இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் ராஜபக்ஷ செய்த அநியாயங்கள் , கொள்ளைகள், களவுகள், ஊழல்களை ஒருபோதும் ராஜபக்ஷ ஏற்றுக் கொண்ட வரலாறு கிடையாது. அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளையும் எதிர்த்த வரலாறு தான் ராஜபக்ஷ வரலாறு. பொய்யும், புரட்டும் ,களவும் கொள்ளையும் ஊழலும் தாண்டவமாடும் நரக ஆட்சி தான் ராஜபக்ஷாக்களின் ஆட்சி. இதனை இன்னும் விளங்காத மனித உருவத்திலான மரக்கட்டைகள் இன்னும் இந்த நாட்டில் இருப்பது தான் வேடிக்கையும் ஆச்சரியமுமான விடயமாகும்.
ReplyDelete