Header Ads



2 வது நாளாக தொடரும், சுகாதார ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு


அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் உட்பட 72 சங்கங்களில் அங்கத்தவர்கள் நேற்று பிப்ரவரி மாதம் முதலாம் தேதி நாடளாவிய ரீதியிலான பணிப்பரிப்பு ஒன்றினை ஆரம்பித்தார்கள்.

அண்மையில் வைத்தியர்களுக்கு அதிகரிப்பு செய்யப்பட்ட 35000 ரூபா (Disturbence Availability  Transport) சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறியே இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகின்றது.


இதுக்கு முன் அடையாள வேலை நிறுத்தங்கள் ஜனவரி மாதம் 10 17 ஆம் தேதிகளில் நடைபெற்றது இதன்போது சுகாதார அமைச்சுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் பலனின்றி போனதால் தற்போதைய தொடர் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வேலை நிறுத்தம் இன்று அதாவது இரண்டாம் தேதி பிப்ரவரி மாதம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.


நாடெங்கிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டாலும் மனிதாபிமான ரீதியில் உயிர் காக்கும் தேவையுள்ள அவசரமான சந்தர்ப்பங்களில் தமது கடமையினை செய்வதற்கு சகல ஏற்பாடினையும் செய்துள்ளார்கள்.


அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பொருட்களின் விலையேற்றத்தை இலங்கையில் உள்ள சகல தரப்பினரும் எதிர்நோக்கி வருகின்ற வேளையில் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் சம்பள அதிகரிப்பினை விசேட தலைப்பின் கீழ் பெற்றுக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாததும் ஏனயவர்களக்கு இணைக்கப்படுகின்ற   அநீதியானதொரு விடயமுமாகும். நாட்டில் உள்ள ஏனைய அரசு சேவகர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குங்கள் அப்படிச் செய்யுங்கள் இப்படிச் செய்யுங்கள் என்று குறித்த ஒரு அரச சேவகர்களின் அமைப்பு மேதாவித்தனமாக கருத்துக்களை  வெளியிடவும் முடியாது ஏனெனில் இலங்கை அரசாங்கத்தின் திறைசேரியின் மூலம் சம்பளம் பெறுகின்ற அனைத்து அரச ஊழியர்களும் சமமானவர்களே.


தொழில்களில், கல்வித் தகமைகளில், திறமைகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம் ஆனால் அரசு ஊழியர் என்ற தலைப்பின் கீழ் வேறுபாடுகள் வர முடியாது.


M.I.Umar Ali LLB,

RGN

Coordinator for Eastern Province

Government Nursing officers Association (GNOA)

No comments

Powered by Blogger.