பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஏன், கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை..? தென்னாபிரிக்கா கேள்வி
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, ஏன் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கரீம் கானிடம் இருந்து தனக்கு எந்த பதிலும் வரவில்லை என்று, தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் புரிந்தது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ள நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment