Header Ads



முன்னேறியது ஹமீத் அல் ஹுசைனி - ஜனாதிபதி ரணில் தலைமையில் இறுதிப் போட்டி


புனித தோமஸ் கல்லூரி மற்றும்  ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி ஆகியன ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசாலைகளுக்கிடையான  கால்பந்து போட்டியான ஆக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் - 2024 சவால் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன.


அரைஇறுதிப் போட்டியி்ல் பிரதம அதிதியாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களுடன் அதிதிகளாக இம்தியாஸ் (உரிமையாளர் பொட்லட்ச்), ஹிபாஸ் பாருக் (உரிமையாளர் மரைன் கிரில் எம் பேர்கர்) காதர் மொஹிடீன் நூஹ் (நூர்) ஹாரூன் அஹமட், சாதிக் (அரமெக்ஸ்) அரூஸ் (ஏ.என்.டீ) அஸ்வர்,கல்லூரி அதிபர் எம்.ஆர்.எம்.ரிஸ்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்


முதல் அரையிறுதியில் புனித தோமஸ் கல்லூரி 6-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் மத்திய கல்லூரியையும், இரண்டாவது அரையிறுதியில் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 3-0 என்ற கோல் கணக்கில் கேட்வே கல்லூரியையும் தோற்கடித்து மாபெரும்  இறுதிப்போட்டியில் இடம்பிடித்துள்ளன.


இவ்விறுதிப்போட்டியானது மின் ஒளியில் மார்ச் 2024 முதல் வாரத்தில் சுகததாச மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.