ஐக்கிய காங்கிரஸ் விற்பனை செய்யப்பட்டு விட்டதா..?
தற்போது எமது கட்சியின் ஸ்தாபக தலைவராக முஸ்லிம் ஒருவர் இருக்கிறார். இதன் தலைவராக தமிழ் சகோதரரும் அறிவிக்கப்படுவார். அடுத்த வருடங்களில் சிங்களவர் கூட கட்சியின் தலைவராக வருவார். அதற்கான முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் உள்ளன.
ஒரு முஸ்லிம் மௌலவியால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, மூவினங்களையும் இணைத்து பெரியதொரு தேசிய கட்சியாக வரும்பட்சத்தில் இது இந்நாட்டின் மிகப்பெரிய வரலாறாக அமையும்.
இந்த உண்மை புரியாமல் எமது கட்சியில் இருந்த இருவர் முஸ்லிம் மட்டும்தான் தலைவராக இருக்க வேண்டும் என இனவாதமாக பேசி வருகின்றனர். தமிழரோ, சிங்களவரோ தலைவராக வருவது என்றால் கட்சியை விற்றுவிட்டதாக மக்களுக்கு பொய் சொல்லி கட்சிக்கு எதிராக செயற்படுவோம் என எம்மை அச்சுறுத்துகிறார்கள்.
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் இக்கட்சித்தலைமை அச்சப்படாது.
இலட்சியம் மட்டுமே எமது இலக்கு.
அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். என்றோ ஒரு நாள் இறைவன் உதவியால் இக்கட்சிக்கு முஸ்லிம், சிங்கள, தமிழ் எம்பீக்கள் கிடைக்கும் எனற நம்பிக்கை எனக்கு உள்ளது.
முபாறக் அப்துல் மஜீத்
ஸ்தாபக தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.
9.2.2024
Post a Comment