இந்திய நாட்டின் சூழல் அறிந்து ரமளான் விடுமுறையில் செல்லும் மாணவர்களுக்கான ஆலோசனை
இஸ்லாமிய பல்கலைக்கழகம்
தாருல் உலூம் தேவ்பந்த்
ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, தாயகம் செல்லும் அன்பான மாணவர்களே, கீழ்க்கண்ட வழிமுறைகளை கவனத்தில் கொண்டு, தங்கள் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கவனித்து பயணம் செய்யுங்கள் உங்கள் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்
அவன் உங்கள் பயணத்தை பாதுகாப்பாக முடிக்கட்டும்
அன்புள்ள மாணவர்களே, தனியாக பயணம் செய்யாதீர்கள்; மாறாக, உங்கள் தோழர்களுடன் பயணம் செய்யுங்கள்.
பயணத்தின் போது, உள்நாடு அல்லது வெளிநாடு, மத அல்லது அரசியல் நடப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும், இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் ஏற்படலாம் திக்ரில்
ஈடுபடுங்கள் அல்லது அமைதியாக இருங்கள்.
* சிலரால் விரும்பத்தகாத ஒன்று நடந்தாலும், பொறுமையாக இருக்க வேண்டும்
புன்னகையுடனும் உங்கள் இஸ்லாமிய ஒழுக்கத்துடனும் நடந்து, அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
தேவைப்பட்டால், ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139ஐத் தொடர்புகொண்டு புகார் செய்யலாம் அல்லது ரயில் நிறுத்தப்பட்டால் அந்த நிலையத்தின் ரயில்வே காவல்துறையிடம் புகார் செய்யலாம். உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பயணம் அமையட்டும்.
கண்காணிப்பாளர்
தாருல்-இகாமா தாருல் உலூம் தேவ்பந்த்
-Muhammed Ismail Najee Manbayee-
Post a Comment