பொய்களை பரப்பி ஞானவாபி, பள்ளிவாசலை அபகரித்துள்ள சங்கிகள்
- ஹைதர் அலி -
ஞானவாபி மஸ்ஜிதில் இருந்தது சிவலிங்க தீர்த்தமல்ல உளூச் செய்ய ஏற்பாடு செய்யப் பட்ட செயற்கை நீரூற்று.
முகலாயர்கள் பள்ளிவாசல் கட்டிட கலையில் மிக முக்கியமானது உளூச் செய்ய கட்டப் படும் செயற்கை நீருற்று வடமாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என்பதற்காக ஊளூச் செய்யும் தடாக நடுவில் சுடுதண்ணீர் வருவதற்காக ஏற்படு செய்யப் பட்டிருக்கும்.
புகைப்படத்தில் நீங்கள் பார்க்கிற பீஜாப்பூர் சுல்தான்களில் மிகவும் பிரபலமான ராணுவ தளபதிகளில் ஒருவரான அப்சல் கான் கட்டிய மஸ்ஜித்.
இப்பள்ளி அவர் பெயரில் அமைந்த அப்சல்பூர் ஊரில் உள்ளது இன்றும் செயற்கை நீரூற்று பயன்பாட்டில் இருக்கிறது.
இதனையே சங்கிகள் திரித்து சிவலிங்கம் என்றும் சிவலிங்க நீரூற்று என்றும் பொய்களை பரப்பி ஞானவாபி பள்ளியை அபகரித்து விட்டனர்.
சில வருடங்களாக பள்ளிவாசல்களை பற்றி படித்துக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் நான் சொல்வது சத்தியமான உண்மை.
ஞானவாபி மஸ்ஜிதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என்று அசாதுதீன் ஓவைசியும் கூறியிருந்தார் தனது பேட்டியில்.
Post a Comment