Header Ads



ஹமாஸின் முக்கிய தலைவரை கைது செய்ததாக இஸ்ரேல் அறிவிப்பு


ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.


ஹமாஸ் இராணுவத்தின் முக்கியத் தலைவரான ஒமர் அல்-ஃபயேத் என்பவரைக் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தனது டுவிட்டர் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.


குறித்த கைது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கையில், காசாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பொலிஸ் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.


மேலும், நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.