உம்மாவின் கபுறுக்கருகில் பிரார்த்தித்து வரும், இந்து சகோதரர் ஸ்ரீதரன்
வெளி உலகம் அறியாத கதை.
எல்லா வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ தினம் பள்ளிவாசலுக்கு வந்து தன் தாயின் கப்ருக்கு அருகில் நின்று பிரார்த்தனை செய்து வருகிறார் காளிகாவ் ஸ்ரீதரன்..
ஸ்ரீதரன் வளைகுடாவிலிருந்து திரும்பியதிலிருந்து இதை ஒரு வழக்கமாக செய்து வருகிறார்...
சுபைதாவின் மகன்களான ஷானவாஸ் மற்றும் ஜாபர் ஆகியோர் தொழுகை முடிந்து வரும்போது, ஸ்ரீதரன் அவர்களுடன் சேர்ந்தும் உம்மாவுக்காக பிரார்த்தனை செய்வார்..
ஸ்ரீதரன் சுபைதாவின் வளர்ப்பு மகனாவார்..
கழிந்த ஜூன் 17 அன்று ஸ்ரீதரன் பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் ஓமானில் இருந்து உம்மா மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்.
‘என் உம்மா அல்லாஹ்வின் அழைப்புக்கு பதிலளித்து இவ்வுலகிலிருந்து விடைபெற்று சென்றார்கள்.. அல்லாஹு அவரது கப்றை விசாலப்படுத்தி, கொடுக்க வேண்டி அனைவரையும் பிரார்த்தனை செய்யுங்கள்....’ இப்படி எழுதியிருந்தார்..
இதை பேஸ்புக்கில் பார்த்த அனைவரும் ஜுபைதா ஸ்ரீதரனின் தாயா என்று ஆச்சரியப்பட்டார்கள்..
பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு ஸ்ரீதரனின் கதை வெளிச்சத்துக்கு வந்தது.
ஸ்ரீதரனின் தாய் சுபைதாவின் வீட்டிலுள்ள வேலைக்காரர்களில் ஒருவராக இருந்தார்.
ஸ்ரீதரனுக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்தார்.
அப்போதிருந்து ஸ்ரீதரன் மற்றும் அவரது சகோதரிகள் ரமணி மற்றும் லீலா ஆகியோரை குடும்பத்திலுள்ள தங்களது சொந்தம் பிள்ளைகளாக வளர்த்து வந்தார் சுபைதா...
அவர் தனது சொந்த மகன்களான ஷானவாஸ், ஜாபர் மற்றும் ஜோல்சினா ஆகியோருடன் இவர்களையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்..
ஸ்ரீதரன் வளைகுடாவுக்கு அனுப்பப்பட்டார்.
மற்ற பெண் குழந்தைகளை நல்லவிதம் கல்வி கற்க செய்து, அவர்களின் திருமணங்களையும் அழகிய முறையில் நடத்தி வைத்தார் சுபைதா...
ஸ்ரீதரனின் மனைவி காளிகாவ் தொகுதி பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்..
இவரது மகன் அன்ஷ்யாம் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்..
__________________________
கெட்ட காலங்களிலும் மனம் குளிரும் நல்ல காரியங்களும் நடக்கத்தான் செய்கிறது...
தமிழில்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
Post a Comment