Header Ads



வெற்றி பெற முடியாதென்பதால், ஜனாதிபதித் தேர்தலை இரத்துச் செய்ய நினைக்கின்றனர்


இன்று இந்நாட்டில் அரசாங்கம் வேறாக  செயற்படும் போது ஜனாதிபதி தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் கூறினாலும், மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் பின்னரே அதனை இல்லாதொழிக்க வேண்டும்.புதிய மக்கள் ஆணையின் மூலமே இது இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஆளும் தரப்பு இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  மக்கள் ஆணையை பெற முடியாமல் இருப்பதாலயே ஜனாதிபதி தேர்தலை இரத்துச் செய்ய நினைக்கின்றனர்.இதனாலயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். உண்மையான அபிலாஷையுடன் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்தால் நாமும் அதற்கு ஆதரவு வழங்குவோம்.இங்கு அவ்வாறான உண்மையான நோக்கம் இல்லை.தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கமே மறைந்துள்ளது.


கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்ட தமது  கைப்பாவைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை பரப்பி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலை இரத்து செய்யும் கொள்கையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்ட திகதியில் உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறது.தேர்தல்களின் பின்னர் கிடைக்கும் ஆணையின் ஊடாகவே இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை திருத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய போர் வீரர்களின் மாநாட்டில் இன்று(10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பயங்கரவாதத்தை இல்லாதொழித்தாலும் நாடு முன்னேறிய பாடில்லை. 


30 ஆண்டுகால கொடூரமான விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை விடுவிக்க முப்படையினர்,

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் போர்வீரர்களும் தங்கள் உயிர்களையும், இரத்தத்தையும்,வியர்வையும் தியாகம் செய்தனர். தியாகங்களைச் செய்து ஓர் நாடாக விடுதலையை, முன்னேற்றத்தை எதிர்பார்த்த போதிலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட அமைதியின் மூலம் எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை, நாடாக நாம் இன்று மீண்டும் விடியலைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாடு பொருளாதார காலனித்துவத்திற்குட்பட்டுள்ளது.


பொருளாதார பநங்கரவாதம் பெரும் துரதிஷ்டமான தேசிய அவலமாகும்,யுத்த வெற்றியின் பின்னர் இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு தலைவர்களாலும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டைக் கூட்ட முடியவில்லை.இவ்வாறு கூட்ட முடியாமை ஆட்சியாளர்களினது திறமையின்மையா அல்லது இயலாமையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.


கொடிய பயங்கரவாதத்தை இல்லாதொழித்த  எமது நாடு பொருளாதாரப் பயங்கரவாதிகளின் சதியில் சிக்குண்டு திருட்டு, ஊழல், மோசடிகளில் கோலோச்சி வருகிறது. நாட்டைக் கட்டியெழுப்பும் மனிதாபிமான பணிக்கான பயணத்தை முன்னெடுக்க நாமனைவரும் தயாராக வேண்டும்.


உண்மையான தியாகிகள் யார்? 


இராணுவத்தினரின் தியாகத்தில், தலைநகரின் குளிரூட்டி இருப்பிடங்களில் இருந்த ஆட்சியாளர்கள், யுத்த வெற்றியின் பெருமையை தமக்கு போர்த்திக் கொண்டு, பணம் செலவழித்து,விளம்பரம் மூலம் தங்கள் நற்பெயர்களை கட்டியெழுப்பினர். இராணுவத்தினரை முன்னிறுத்திச் சென்று ஜனாதிபதி கதிரையில் ஏறிய தற்போதைய ஆட்சியாளர்களும் கூட,இராணுவ வீரர்களுக்கு ஒரு நிவாரணத்தைக் கூட வழங்கவில்லை.அங்கவீன போர்வீரர்களுக்கான அனைத்து நிவாரணங்களையும் குறைக்கும் பிரதான நபராக இவர்கள் இன்று மாறியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


முன்னாள் அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் போர்வீரர்களை மறந்து விட்டன, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி போர்வீரர்களை ஒருபோதும் மறக்காது. ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, கனடா போன்ற நாடுகள் போர் வீரர்களை பெருமையுடன் நடத்துகின்றன. நமது நாட்டில் ரணவிரு சேவா அதிகார சபை மட்டுமே உள்ளது.இந்நிறுவனம் போர் வீரர்களின் நலன்களுக்காக கடுமையாக முயற்சித்துள்ள போதிலும், அவர்களுக்கு எந்த ஒதுக்கீடுகளும் முறையாக வழங்கப்படவில்லை.அதற்கான ஏற்பாடுகளும் இல்லை.


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் போர்வீரர்களுக்கு பக்க பலத்தை வழங்க, ஒரே தரம் ஒரே ஊதியம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த பரிசீலனை நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு உறுதியளித்தார்.


நாட்டிலுள்ள இராணுவத்தை குறைப்புச் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும்,30 இலட்சம் நட்டஈடு கொடுத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கூட நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதுள்ளது.ஆட்சியாளர்களின் நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இல்லை.அரசாங்கத்தின் கெடுபிடிகளால், நாட்டின் ஏழ்மையானோர் 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்துள்ளது.

இது தான் அரசாங்கத்தின் கெட்டித் தனம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.