Header Ads



நிறை குறைவான பாண், விற்பனை செய்தவர்கள் பிடிபட்டனர்


நிறை குறைவான பாணை விற்பனை செய்த நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலமாக நிறை குறைவான பாண் விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பாணின் எடை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.


பேக்கரி மற்றும் வர்த்தக நிலையங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது உரிய எடையை கொண்டிராமை மற்றும் விலையை காட்சிப்படுத்தாமை போன்ற காரணிகளின் அடிப்படையில் பாண் உற்பத்தியாளர்கள் மற்றும் பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.