காசா தொடர்பில் அமெரிக்காவில் நின்றபடி, கத்தார் பிரதமர் குறிப்பிட்டுள்ள உணர்வு பூர்வமான விடயம்
கத்தார் பிரதம மந்திரி அமெரிக்க விஜயத்தின் போது, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் தனது நாட்டின் பங்கு பற்றி பேசினார்.
"இந்தப் போரை நிறுத்துவதற்கும், அந்த உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், அந்தக் குழந்தைகளையும் அந்தப் பெண்களையும் கொல்லப்படுவதிலிருந்தும், துரத்தித் துரத்தி குண்டுவீசப்படுவதிலிருந்தும், விமானத் தாக்குதல்களாலும், டாங்கிகளாலும், எல்லாவற்றிலும் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கூறினார்.
ஒரு ஒப்பந்தம் எப்போது வரும் என்று தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்: "இது இரண்டு தரப்பினரையும் சார்ந்துள்ளது."
யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவில்லையென்றால், பிராந்திய மோதலின் அபாயம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Post a Comment