Header Ads



யாழ் முஸ்லிம்கள், ஒஸ்மானியா கல்லூரி, நவாஸ்தீன் குறித்து பேராசிரியர் மௌனகுருவின் குறிப்புக்கள்


மனம் மகிழும் தருணம் இது,

அன்று மாணவன் பின்னர் பேராசிரியர். இன்று  கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர்  நவாஸ்தீன்

---------------------------------------------+--

1976 -1980 வரை யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராகப் படிப்பித்துக் கொண்டிருந்தேன்

அருமையான அதிபர் 

அன்பான மாணவர்கள்

 உபசரிக்கும் ஊர வர்கள்

எந்த பெரிய பாடசாலைக்கு போனாலும் எனக்கு ஆறாம் ஏழாம் வகுப்பு தாருங்கள் என்று கேட்டு எடுத்துக் கொள்வேன்

அந்த மாணவர்களுடன் பழகுவதில் ஒரு பெரும் ஆனந்தம்

கள்ளம்  கபடம் இல்லாத பருவம் அந்த 12 வயது பருவம்

1980 களில் அப்படி ஒரு ஏழாம் வகுப்பில் படிபித்துக் கொண்டு இருந்தபோது  நான் சந்தித்த மாணவன் தான்  நவாஸ்தீன்

அந்த மாணவனை ஏறத்தாள 42 வருடங்களுக்குப் பின் திடீரென சந்திக்கிறேன்.

சந்தித்த இடம் கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபம்

கலைப்பீடம் நடத்திய வருடாந்த ஆய்வு மாநாட்டுக்கு சில ஆய்வு கூட்டங்களுக்கு தலைமை தாங்க அவர் வந்திருந்தார்

என்னையும் அப்படித்தான் ஒரு பகுதிக்குத் தலைமை தாங்க  அழைத்திருந்தனர்

ஆரம்ப வைபவக் கூட்டம்   பிரதான  மண்டபமான  நல்லையா  மண்டபத்தில்  நடந்தது  அது முடிய 

என் அருகில் ஒருவர் வந்தார்

பெரிய ஆகிருதி.

அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றார்

அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை

அருகில் நின்ற ஒருவர்அவரை அறிமுகம் செய்து வைத்தார்

“இவர்தான் பேராசிரியர் நவாஸ்தீன். திறந்த பல்கலைக் கழகத்தில் கற்பிக்கிறார்”

அவருடன் நான் கைகுலுக்கும் பொழுது அவர் என்னைப் பார்த்து  

"சேர் நான் உங்கள் மாணவன்" என்றார்

எனக்கு அவரை ஞாபகம் வரவில்லை

"எங்கே மாணவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலா? கிழக்குப் பல்கலைக் கழகத் திலா?

என் ஞாபக சக்தியை ஒரு கணம் நான் பரிசீலித்துக் கொண்டிருந்தேன்

அந்த மௌனத்தை அவரே உடைத்தார்

"சேர் நான் உங்கள் இடம் பாடசாலையில் கல்வி பயின்றேன், யாழ்ப்பாணம்  ஒஸ்மானியா கல்லூரியில் ஏழாம் வகுப்பில்"

என்றார்

என் நினைவுகள் 40 வருடங் களைத்தாண்டி ச்சென்றன

அந்த வகுப்பும் சில மாணவர் களும் ஞாபகம் வந்தார்கள்

அவர்கள் உடல் தோற்றம்

 எல்லாம் இப்போது மாறி இருக்கும்

அவர்களுள் ஒருவராக இவர் இருந்திருக்கிறார்

எப்போதும் நான் மாணவர் களை வாசிக்கச் சொல்லுவேன்

வாசிப்பு பயிற்சியும் வைப்பேன்

வாசிப்பு போட்டியும் வைப்பேன்

அன்று நான் அவர்களுக்கு ஒரு வாசிப்பு போட்டி வைத்தேன்

அந்த வாசிப்பில் முதலாவதாக வருபவருக்கு  நூல் பரிசளிப் பேன் என்றும் கூறியிருந்தேன்

அதில் திறமையாக வாசித்து முதலிடத்தை பெற்றவர் தான் இந்த நவாஸ்தீன்

அதை ஞாபகப்படுத்திய அவர்

"எனக்கு இன்னும் அந்த நூலை நீங்கள் தரவில்லை"என்றார்

பகிடியாகத் தான் கூறினர்

ஆனால் அவர் சொற்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டன

இத்தனை காலமாக அந்த நினைவைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்

அந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களில் நான் பலாலி அரசி னர் ஆசிரியர் கலாசாலைக்கு விரிவுரையாளராகச் சென்று விட்டேன்

அதன்பின்னால் அந்த மாணவனை நான் சந்திக்கவே இல்லை

அதன்பினால் பல்கலைக்கழக விரிவுரையாளராகி இரண்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வும் பெற்று வாழ்வின் சாயங்காலப் பொழுதுக்குள்  வந்து விட்டேன்

இடையில் எத்தனையோ பெரும் மாற்றங்கள் வாழ்வில் நடைபெற்றும் விட்டன

நாட்டுப் பிரச்சனை

 இடப்பெயர்வு

 என்பனவெல்லாம் நிகழ்ந்து முடிந்தும்விட்டன 

வாழ்க்கையில் பல சோதனை களை தாண்டி வந்த அந்த மாணவன் பழையதை ஞாபகப்படுத்தி நான் செலுத்த வேண்டிய கடனைக் கேட்கிறான்

மிகுந்த வாஞ்சையுடன்   பேராசிரியர் நவாஸ்தீனின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்

ஓஸ்மானியா நினைவுகள் அலையலையாக எழுந்தன

அருகில் உள்ளவர்களுக்கு நவாஸ்தீனை

 "எனது ஏழாம் வகுப்பு மாணவன்"   என அறிமுகப்படுத்தினேன்

அதில் ஒரு பெரும் மகிழ்வும் கண்டேன்

நேற்றுதான் அவருக்கு திறந்த பல்கலைக்கழகத்தில் ஒரு துறையில் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது

இன்று அவருக்கு போன் பண்ணினேன் 

மனம் நிறைய வாழ்த்தினேன்

பழைய நினைவுகளை மீண்டும் மீட்டுக் கொண்டோம்

"நவாஸ் நானும் உங்களுக்கு ஒரு கடன்காரன் 

ஒரு புத்தகம் தர வேண்டும்"

 என்றேன்

என்ன சேர் இது என்றார்

"இல்லை  அக்கடனை நான் அடைக்க வேண்டும்"

என்றேன்

"சொல்லைக் காப்பாற்ற வேண்டும்"

 என்றேன்

1980 களுக்கு பின்னர் நமது வாழ்வையும்  போர்ச்சூழலில் தான் தப்பி கொழும்பு வந்ததை யும் என்னிடம் கூறினார்

கடினமான ஒரு வாழ்வு பயணம்

இப்போது மிக நன்றாக இருக்கிறார்

அவரது இரு குழந்தைகளும் உயர் நிலையில் இருக்கிறா ர்கள்

அவரை நான் விரைவில் சந்திக்க வேண்டும்

மறந்துவிடாமல் நான் தருவேன் என்ற புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்

மௌனகுரு

No comments

Powered by Blogger.