உங்களை யாரும், பாசத்தோடு வீட்டிற்கு அழைத்தாள்...}
அன்பான உறவினர்களே! நண்பர்களே!
உங்களை யாரும் பாசத்தோடு வீட்டிற்கு அழைத்தாள் அழைப்பை தட்டிக் கழிக்காதீர்கள்.
அதுவே நீங்கள் அவர்களோடு கதைக்கும், கடைசி நேரமாகவும் இருக்கலாம்.
எனக்கு நடந்த அனுபவம்.
என்னை கடைசியாக நான் நாட்டிற்கு சென்றிருந்த போது ஆசிரியர் (அதிபர்) முப்தி அவர்கள் வாங்க வீட்ல போய் டீ ஒன்னு குடிச்சிட்டு போகலாம். என்று என்னை அழைத்தார் நான் அவசர வேலை இருக்கின்றது என்று சொல்லி தட்டி கழித்து விட்டு சென்று விட்டேன் பிறகு வாரேன் என்று அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது.
அதே போன்று அவருடைய மகன் ஹம்தாதானும் நான் ஹுனைஸ் நகருக்கு செல்லும் போதெல்லாம் வீட்டிற்கு அழைப்பார் தட்டிக் கழித்து விட்டு சென்று விடுவேன்.
அவரையும் கடைசியாக பார்த்த நாள் அது தான்.
எனவே அன்பார்ந்த நண்பர்களே உங்களை யாரும் வீட்டிற்கு அன்பான முறையில் அழைத்தால் தட்டிக் கழிக்காதீர்கள் இன்ஷா அல்லாஹ் அழைத்தவர் வீடு சென்று சென்று விட்டு சந்தோசமாக உங்கள் வீடு திரும்புங்கள்.
ASAN HAMEEM
Post a Comment