Header Ads



திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு - எச்சரித்துள்ள மத்திய வங்கி


பொருளாதார வளர்ச்சியானது. கணிக்கப்பட்ட அளவை விட குறையும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. 

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையில் மேலும், உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.


இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது.


தற்போது கணிக்கப்பட்டுள்ளபடி, குறுகிய காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால் பொருளாதாரம் படிப்படியாக அதிக வளர்ச்சி நிலைக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.