Header Ads



உலக மகா, மிம்பர் மேடை


இருபது வருடங்களுக்கு முன்னர் சரியாக  இது போன்ற ஒரு (February 4, 2004) தினத்தில் தான் நமது ஆசிரியர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது அபூர்வ நூலான மின்னணு முகநூலை வடிவமைத்து வெற்றி கண்டார்.


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த மார்க் ஒரு நாள் தனது படுக்கை அறைக் கட்டிலில் சார்ந்திருந்த வேளை ஒரு யோசனை தோன்றியது. - அதுவும் ஒரு copy + paste யோசனைதான்.


அதாவது ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அதன்பிரபலங்கள் பற்றி அறிய ஒரு சுயவிவரக் கோவை இருந்தது, அதனை முகநூல் என்றே அழைக்கப்பட்டது. இதனை மையமாக வைத்து, அது போன்று பல்கலைக்கழக மாணவர்களின் சுயவிவர கோவைகளை ஒன்று சேர்க்க மார்க்கு தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஒரு தளத்தை வடிவமைத்தார்.


ஆரம்பத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமே இணைக்கப்பட இந்த சுயவிவர முகநூல் தளத்தில், காலப் போக்கில் இதர பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுவாக யாவரும் இணைய அனுமதிக்கப்பட்டதால் துரித வெற்றி காண ஆரம்பித்தது. 


அந்த மின்னணு நூல் தான் இப்போது உலகெங்கிலும் உள்ள  மூன்று பில்லியன் மக்களின் விருப்பத்திற்குறிய நூலாக திகழ்கிறது, இந்த இலத்திரனியல் மேடை  அறிவுக்கு விருந்தாக, அழிவுக்கு வழியாக, அரசியல் மன்றமாக, இலக்கிய அரங்கமாக, ஊடக மேடையாக, வர்தக தளமாக, உறவுகளுக்கு பாலமாக பல்வேறு அவதாரங்களுடன் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. 


சமூக தொடர்பு சாதன உலகில் திருப்பு முனையாக மிளிரும் முக நூலானது, அது இல்லாத ஒரு உலகை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக உள்ளதல்லவா...?


மார்க்கு முதன் முதலில் தனது நண்பனுடன் பதிவேற்றிய படம்தான் இது. அப்போது ஒரே ஒரு லைக்தான் கிடைத்தது, அதுவும் அந்த நண்பன் போட்ட லைக்தான்.


Imran Farook

No comments

Powered by Blogger.