பலஸ்தீனத்தின் உருக்கமான வேண்டுகோள்
பாலஸ்தீன அமைச்சர் காசா படுகொலைகளை நிறுத்த ஐக்கிய அரபு நிலைப்பாட்டை வலியுறுத்துகிறார்
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்குள் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுவர பாலஸ்தீன தகவல் அமைச்சர் நபில் அபு ருடைனே அழைப்பு விடுத்துள்ளார்.
துருக்கியில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய அபு ருடைனே,
“இஸ்ரேலை அதன் மூர்க்கமான போரை நிறுத்தவும், மனிதாபிமான, மருத்துவம் மற்றும் உணவு உதவிகளை அனுமதிக்கவும், முழு காசாவிற்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்கவும் அமெரிக்காவை நிர்ப்பந்திக்க ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாடு தேவை.
வடக்கு காசா பகுதி ஒரு மனிதாபிமான பேரழிவு மற்றும் உண்மையான பஞ்சத்தை எதிர்கொள்கிறது
ரஃபா மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலானது, பாலஸ்தீனியர்களின் பாரிய இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அபு ருடைனே எச்சரித்தார்.
Post a Comment