இத்தாலியில் இலங்கை முஸ்லிம்களின், ரமழானை வரவேற்கும் நிகழ்வு
சுமார் 180 பேரளவில் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஆத் (இஸ்லாமி) சிறப்பு அழைப்பாளராக வருகைதந்திருந்தார் . நிகழ்வு கிராஅத்துடன் ஆரம்பமானது. பின்னர் SLMC நிர்வாகத்தின் தலைவர் Riyas Zawahir வரவேற்புரையை நிகழ்தினார்.
முதலாவது நிகழ்வாக ரமளானை நினைவூட்டும் சொற்களை சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக காட்சிப்படுத்தியதோடு, அனைவரும் ஒருங்கே ரமளானை வரவேற்று சபையோரை உற்சாகப்படுத்தினர்.
சிறப்பு அழைப்பாளர் மூலம் ரமலான் வகுப்பொன்று பெரியவர்களுக்கும் , சிறுவர்களுக்கு அல் ஆலிமா ஷாமிலா நாளிர் (ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா) அவர்கள் மூலம் சிறியதொரு ரமலான் WORK SHOP உம் நடத்தப்பட்டது .
இதனை தொடர்ந்து லுஹர் தொழுகை மற்றும் பகல் போசன இடைவேளைக்கு பின் MUSABAQATHU RAMDAN என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி எமது சிறுவர்களுக்காக நடத்தப்பட்டது .குறித்த நிகழ்வில் சிறுவர்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டதுடன் பார்வையாளர்களையும் இந்நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது .
தொடர்ந்து இரு குழுக்கஸீதாக்கள் அரங்கேற்றப்பட்டன.
பின்னர் எமது சிறப்பு அழைப்பாளரின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
அத்தோடு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனைத்து சிறார்களும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிய கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக SLMC இன் செயலாளர் Naalir Niyas தனது நன்றியுரையை வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தமது உழைப்பாலும் பொருளாலும் உதவியவர்கள்(Volunteers), எமது விஷேட அதிதி , மற்றும் குறித்த மஸ்ஜித் நிர்வாகத்தினர் என அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இறுதியில் மஃரிப் தொழுகையுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன;
அல்ஹம்துலில்லாஹ்!
JAZAKUMULLAHU HAIREN.
SLMC MEDIA UNIT.
Post a Comment