Header Ads



சர்வதேசத்தில் தலைப்புச் செய்தியாகவிருந்த, ஹிந்தின் உடல் குடும்பத்தினருடன் கண்டெடுப்பு


12 நாட்களுக்குப் பிறகு ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜப்பின் உடல் அவர்களின் குடும்பத்தினர் 5 பேருடன்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.


அவரது குடும்ப கார் மீது, இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரின் உடல்கள் தல் அல்-ஹவா பகுதியில் இன்று -10- கண்டெடுக்கப்பட்டன. 


தால் அல்-ஹவா சுற்றுவட்டாரத்தில் உள்ள ஃபைனான்ஸ் ரவுண்டானாவுக்கு அருகில் ஆக்கிரமிப்பு டாங்கிகளால் சூழப்பட்டு திட்டமிட்ட ரீதியில்  படுகொலை செய்யப்பட்டனர்.


காருக்குள் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், 6 வயது சிறுமி ஹிந்த் சில நாட்கள் காருக்குள் உயிர் வாழ்ந்ததாக, சர்வதேச ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.