"இது அத்தனையும் ஒரு முஸ்லிமுக்கு, எப்போதும் இருக்க வேண்டியவை"
- Rosy S Nasrath -
உதுமானியர்கள் காலத்தில் உருவாக்கிய புதுவித சுவர் கடிகாரமாம் இது .
யாரும் மணி என்ன என வினவினால் இப்போது தவ்ஹீதுக்கான நேரம், இது நீதிக்கான நேரம், இது ஒழுக்கத்திற்கான நேரம் எனக் கூறப்படும்பொழுது அதில் எழுதியிருப்பதை போல இத்தனை மணி என கேட்பவர்களாகவே தெரிந்துகொள்வார்களாம்.
12 மணி - ஹக் (சத்தியம்)
11 மணி - இஸ்லாம் (சமாதானம்)
10 மணி - உம்ரான் (செழிப்பு)
9 மணி - அக்லாக் (ஒழுக்கம்)
8 மணி - அத்ல்/ஆதில் (நீதி/நேர்மை)
7 மணி - அமல் (செயல்)
6 மணி - இன்சான் (மனிதன்/மனிதாபிமானம்)
5 மணி - ஹிக்மா (ஞானம்)
4 மணி - அக்ல்/அகில் (அறிவு)
3 மணி - இர்ஃபான் (எச்சரிக்கை)
2 மணி - இல்ம் (கல்வி)
1 மணி - தவ்ஹீத் (ஏகத்துவம்)
இது அத்தனையும் ஒரு முஸ்லிமுக்கு எப்போதும் இருக்கவேண்டியவை என்பதாக இக்கடிகாரங்கள் போதித்துக் கொண்டே இருக்குமாம்.
Post a Comment